திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் 2022ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நவம்பர் 1ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் மாறுதல்கள் செய்தல் இளம் வாக்காளர்களை

இந்திய தேர்தல் ஆணையத்தில் கருடா செயலி, வாக்காளர் உதவி மைய கைபேசி செயலி, இணையதளம் வாயிலாக சேர்த்தல் போன்ற களப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சிறப்பு மேற்பார்வையாளர் மற்றும் சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சிறப்பு அரசு செயலர் மகேஸ்வரி தலைமையிலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.