புனித அந்தோணியார் முதியோர் இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

0 343
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்டம் காட்டூர் பகுதியில் புனித அந்தோணியார் முதியோர் இல்லத்தில் மாநில இளைஞரணி செயலாளர் பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணியின் சார்பாக நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் இன்று மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் தலைமையில் காலை உணவு தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரனால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.எம்.கருணாநிதி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாலமுருகன் தேசிங்குராஜா, சக்திபிரகாஷ், விஷ்ணுவரதன் மற்றும் ஒன்றிய நகர பகுதி பேரூர் அமைப்பாளர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் b.l ரவீந்திரன் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.