திருச்சி தெற்கு மாவட்டம் மலைக்கோட்டை பகுதியில் கலைஞர் அறிவாலயம் அருகில்
மாநில இளைஞரணி செயலாளர் பிறந்த நாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட மலைக்கோட்டை பகுதி கழக இளைஞர் அணியின் சார்பாக நடைபெற்றது.
தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் இன்று கலைஞர் அறிவாலயம் அருகிலுள்ள விடிவெள்ளி குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் தலைமையில் காலை உணவு மலைக்கோட்டை பகுதி செயலாளர் மு.மதிவாணன் வழங்கப்பட்டது.
மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாலமுருகன் தேசிங்குராஜா, சக்திபிரகாஷ், ரவீந்திரன், விஷ்ணுவரதன் மற்றும் ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக அமைப்பாளர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை மலைக்கோட்டை பகுதி இளைஞரணி அமைப்பாளர் V.k கோபிநாத் செய்திருந்தார்.