திருச்சி பச்சைமலையில் 7க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் வட்டாரத்தில் சோபனபுரம் வழியாக டாப் செங்காட்டுப்பட்டிக்கும், துறையூா் வட்டாரத்தில் கீரம்பூா், செங்காட்டுப்பட்டி வழியாகவும் பச்சமலைக்கு செல்லலாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் சோபனபுரம்- டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் சாலையில் 7 இடங்களிலும், இதேபோல மூலக்காடு- எருமப்பட்டி செல்லும் சாலையில் 6 இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த துறையூா் வனத்துறையினா் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.