திருச்சியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியிலுள்ள கங்காரு மனநல காப்பகத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருச்சி திருவானைக்கோவில் செக்போஸ்ட் அழகிரிபுறம் பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில் மற்றும் உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராம்குமார், ஏ எம் பி இளங்கோவன், கைக்குடி ராமசாமி, கேபிள் கார்த்தி, ரஜினி ஸ்ரீதர், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.