நிர்பயா சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தக்கோரி “மகளிர் ஆயம்” சார்பில் ஆர்ப்பாட்டம்

0 268
Stalin trichy visit

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பன்னாட்டு நாளையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் – நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனக் கோரி – தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” சார்பில் திருச்சி, தஞ்சை, மதுரை, பெண்ணாடம், புதுச்சேரி ஆகிய இடங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தில்லியில் இளம்பெண் நிர்பயா கயவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையொட்டி 2013இல் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வேண்டும், அதன்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் உடனே அமைக்க வேண்டும்.

காவல்துறையினருக்கு பெண்களின் உரிமை தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் தனிச்சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும், பள்ளி – கல்லூரிகளிலும், பெண்கள் பணியாற்றும் இடங்களிலும் “விசாகா” குழுவை விதிவிலக்கு இல்லாமல் உருவாக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முக்கிய காரணமாக விளங்கும் மதுக்கடைகளை மூட வேண்டும், குடும்ப வன்முறை உள்ளிட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டும் காட்சி ஊடகங்களைக் கண்காணித்து நெறிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்ப்பாட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.

அதன்படி திருச்சியில், மத்திய பேருந்து நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் ஆயத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் த.வெள்ளம்மாள் தலைமை ஏற்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா.வைகறை, தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் மூ.த.கவித்துவன், த.தே.பே. தோழர் மு.கிருட்டிணமூர்த்தி, மகளிர் ஆயத்தின் தோழர் இரா. பேபிராணி, நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பாரி மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனுராதா, பிரியா, ஜாக்குலின், பிரேமா, முத்துமாரி, மாணவிகள் அருந்தமிழ், மெய்க்கீர்த்தி, லக்சனா உள்ளிட்டோரும், த.தே.பே. விராலிமலை கிளைச் செயலாளர் தோழர் வே.பூ.ராமராசு, திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் வே.க.இலக்குவன், திருவெறும்பூர் கிளைச் செயலாளர் தோழர் பாஸ்கர், பொதுக்குழு தோழர் இனியன், தோழர்கள் தியாகராசன், சுப்ரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.