தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு; அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

0 387
Stalin trichy visit

திருச்சி மாவட்ட தடகள சங்கம், நியூரோ ஒன், ஆப்பிள் மில்லட் குழுமங்கள் ஆகியவை இணைந்து நடத்தும் இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற்கோப்பை -2021 என்ற பெயரில் ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் குழுமமும் இணைந்து 12, 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ் உள்ள இருபாலருக்குமான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா செயற்கை ஒடுதள விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதற்கு திருச்சி மாவட்டதடகள சங்க செயலாளர் D.ராஜு தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர், இணைச் செயலாளர் சுதமதி ரவிசங்கர், முனைவர் ஹரிஹர ராமச்சந்திரன், கே.சி. நீலமேகம், இ.எம்.தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆப்பிள் மில்லட் வீரசக்தி, நியூரோ ஒன் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.விஜயகுமார், திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கே.பிரபு, ஸ்டேட் பேங்க் எஸ்.மோகன் நினைவு சுழற்கோப்பை குழுமம் தலைவர் எம்.கிரிஷ் பிகோவன், ஸ்வர்கதிவ்யதர்ஷினி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டிய துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இப்போட்டியின் முலம் திணடுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில விளையாட்டு போட்டிகள் வருகிற 8, 9, 10 மற்றும் 11.12.21 தேதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். 14 மற்றும் 16 வயது பிரிவில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அனைத்து மாவட்ட போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவர். கொரோனா காலகட்டத்தில் அரசின் பரிந்துரை விதிகளை பின்பற்றி போட்டிகள் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.