ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ. அபிஷேகபுரம் பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து

0 350
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் துணைமின் நிலையத்தில் குடிநீர் பீடர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை செவ்வாய்கிழமை  காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் வினியோகம் இருக்காது. எனவே  (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீரங்கம், பொன்மலை,கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. அதன்படி ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மஹாலட்சுமி நகர், நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்ப நகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம்.

 

பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலணி ,விவேகானந்தா நகர், ஜே.கே நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமான நிலையப் பகுதி, காமராஜ்நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல் நகர், ஆனந்த் நகர், சத்யவானி முத்து நகர், அய்யப்ப நகர்.

 

கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களா நகர், பாத்திமா நகர், சிவா நகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம் நகர், பாரதிநகர், புத்தூர் பகுதி, எடமலைப்பட்டிபுதூர், அன்பு நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நடைபெறாது. நாளை மறுநாள் (புதன்கிழமை) வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.