திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் விருப்ப மனு பெறுவதற்கு 30-11-2021 காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது,
இதனைத் தொடர்ந்து கழகத் தோழர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க,விருப்ப மனு பெறுவதற்கான காலக்கெடு கூடுதலாக ஒரு நாள் 01-12-2021 வரை நீடிக்கப்படுகிறது,
விருப்ப மனு பெறும் கழக நிர்வாகிகள் 01-12-2021 அன்றுவரை மனுவினை பெற்றுக் கொண்டு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.என்.நகர்,திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் விருப்ப மனுவினை வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,
கட்டண விபரம்
மாமன்ற உறுப்பினர்-ரூ 10,000/-
நகர்மன்ற உறுப்பினர் ரூ 5000/-
பேரூராட்சி உறுப்பினர் ரூ 2500/-
குறிப்பு:-
ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் போட்டியிடுவோர் மேற்படி கட்டணத்தில் பாதித் தொகையை மட்டும் செலுத்த வேண்டும்,போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தாங்களே நேரில் வந்து மனுவைப் பெற்றுக் கொள்ளவும், நேரில் பெற்று கொள்ளும் மனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த தகவலை திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.