நந்தியாறு ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றி தூர்வாரப்படும்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்

0 523
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, லால்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்
தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் நீர் நிறைந்த ஏரிகள், மழைநீர் சூழப்பட்ட பகுதிகள், சேதமடைந்த பயிர்கள், சேதமடைந்த சாலைகள் மற்றும் நந்தியாறு செல்லும் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், தொடர் மழையால் நந்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் இங்கு உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பருத்தி, மக்காச்சோளம் ,நெல் வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி நந்தியாறு வருகின்ற கோடைகாலத்தில் ஆற்றை அளவீடு செய்து ஆக்கிரமைப்புகளை அகற்றி அகல படுத்தப்படுத்தி தூர் வாரப்படுமென கூறினார். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன், லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் வேளாண் துறை வருவாய் துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.