முகநூல் மூலம் காதலித்து திருமணமான 15 நாளிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையான வாலிபர் தனது மனைவி கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை

0 489
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்அருகே காட்டூர் பாத்திமாநகர் 6வது தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமியின் மகன் சதீஷ்( வயது 29). மேலும் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கொரோனா காலம் என்பதால் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முகநூலில் கோயம்புத்தூரை சேர்ந்த ஹேமா (வயது 20) என்ற பெண்ணை காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சதீஷ் தனது மனைவி ஹேமாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஹேமா பணம் கொடுக்காததால் மன விரக்தி அடைந்த சதீஷ் தனது மனைவி கண் முன்னே வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தை அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.