பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளராக பதவி வகித்தவர் ம.பிரின்ஸ். அவரை, பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளராக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி செயலாளர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் மாநில தலைவர் ஜி.கே.மணி நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருச்சி மேற்கு மாவட்டம் என்பது மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். புதிதாக நியனம் செய்யப்பட்டுள்ள மேற்கு மாவட்ட செயலாளர் பிரின்ஸ்சுக்கு கட்சியின் முழு ஒத்துழைப்பு நல்குமாறு ஜி.கே.மணி கேட்டுக்கொண்டுள்ளார்.