திருவானைக்கோவிலில் சிற்பங்களை ட்ரோன் கேமராவில் ஒளிப்பதிவு செய்யும் பணி
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளையும், கோவில் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் உரிமை, ஆவணங்களையும், புராதன சின்னங்களையும், சிற்பங்களையும், ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கோவில் நிலங்கள், கட்டிடங்களின் விவரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் கணினி வழியாகப் பார்வையிடும் வகையில், புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் பழமைவாய்ந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில் வளாகங்கள் மற்றும் கற்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை ட்ரோன் கேமராவில் ஒளிப்பதிவு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி கள் இன்னும் சில நாட்கள் நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தன.