திருச்சியில் மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்!
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அசைக்க முடியாத சக்தியாக, இளம் அமைச்சராக வலம் வருபவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரின் தினசரி செயல்பாடுகளால் பலர் கவரப்பட்டு வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.

அதற்கு ஏற்றாற் போலவே திருச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் இன்று அமைச்சரின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்து பணி செய்ய இணைந்துள்ளனர்.
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் பொன்மலைப்பகுதி
28வது வட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் 261 பேர் பொன்மலை பகுதி கழக செயலாளர் இ.எம் தர்மராஜ் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் வட்டக் கழகசெயலாளர் M.K மணி, SMS சாகுல் ஹமீத் ,அப்துல் ஜப்பார், ஜியாவுதீன், எம்.கே.எம் சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8