திருச்சி சமயபுரத்தில் அரசு உத்தரவினை மீறி செயல்படும் தனியார் பள்ளி!

0 356
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் கல்வி பயின்ற 8 மாணவர்களுக்கு பேருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதனால் இம் மாதம் 20 ம் தேதி பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எஸ்ஆர்வி பள்ளி டிசம்பர் 20 ம் தேதி முதல் 26 ம் தேதி பள்ளி நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. இந்நிலையில் தமிழக அரசு இம் மாதம் 26 ம் தேதி முதல் வரும். ஜனவரி 2 ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. ஆனால் சமயபுரம் எஸ்ஆர்வி பள்ளி அரசின் உத்தரவினை மீறி் 6 ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு இம் மாதம் 27 ம் தேதி முதல் பள்ளி தொடர்ந்து நடைபெறுகிறது.

 

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள சமயபுரம் சுங்கசாவடி அருகே எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

இப்பள்ளி 6 ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை உள்ளது. இப் பள்ளியில் 3,500 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினசரியாகவும், விடுதியிலும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு விடுதி மாணவர்கள் 5 பேருக்கு தொடர் காய்ச்சலால் அவதியுற்றனர். அதே போல தினசரி வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் 3 பேர் என 8 பேருக்கும் தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து விடுதி மாணவர்களை தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்த தில் 5 பேருக்கும் கொரோனா தொற்று என பரிசோதனை முடிவு தெரியவந்த்து. அதே போல தினசரி வீட்டிலிருந்து பள்ளி வந்த ப்ளஸ் 2 மாணவர்கள் மூவருக்கும் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட னர்.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 20 ம் தேதி பள்ளியில் கல்வி பயிலும் ப்ளஸ் 2 மாணவ மாணவிகள் 600 பேருக்கும் சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மைய வட்டார மருத்துவர் டாக்டர் மதிவாணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர்கள் ( பிசிஆர் ) கொரோனா பரிசோதனை பள்ளி வகுப்பறையிலே நடத்தி வருகின்றனர்.

 

கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளான பள்ளி மற்றும் அனைத்து விடுதிகளைகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய இன்று 20 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை பள்ளி மற்றும் விடுதிகள் விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறப்பித்ததின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

 

இந்நிலையில் தமிழக அரசு இம் மாதம் 26 ம் தேதி முதல் வரும். ஜனவரி 2 ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. ஆனால் சமயபுரம் எஸ்ஆர்வி பள்ளி அரசின் உத்தரவினை மீறி் 6 ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு இம் மாதம் 27 ம் தேதி முதல் இப் பள்ளி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.