சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை ராக்கம்பட்டியைச் சேர்ந்த கோபால் என்ற சண்முகசுந்தரம் (வயது 22) என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி தன்னுடைய தாயிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் தாய் மணப்பாறை மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கோபால் என்ற சண்முகசுந்தரத்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.