வேட்பாளர் மணிமேகலைக்கு குத்தாட்டம்போட்டு வாக்கு சேகரித்த தொண்டர்கள்!
திருச்சி மாநகராட்சி 13வது வார்டு திமுக வேட்பாளர் மணிமேகலை ராஜபாண்டி தனது வார்டுக்கு உட்பட்ட ஆண்டால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளங்கள் முழங்க பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி தொண்டர்கள் ஆட்டம் ஆடி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மாலை, சால்வை அணிவித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தின்போது அவர் கூறுகையில், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைப்பதுடன், சாலை வசதி இல்லாத இடங்களில் புதிதாக சாலை வசதி கொண்டு வருவேன்.

தினமும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன். இரவு நேரத்தில் அதிகரித்துவரும் கொசு தொல்லையை ஒழிக்க அவ்வப்போது மாலைநேரத்தில் கொசு மருந்து அடிக்க வழிவகை செய்வேன். மேலும் அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் நமது வார்டு பகுதிகளில் செயல்படுத்த திறம்பட செயல் படுவேன். எனவே எனக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள் என்றார். பிரச்சாரத்தின்போது தி.மு.க. தொண்டர்கள் குத்தாட்டம்போட்டு வாக்காளர்கள் கவனத்தை ஈர்த்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.