தி.மு.க. வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து அமைச்சர் தேர்தல் பிரச்சாரம்!

0 361
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 16வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் மலர் தூவி, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் கூறுகையில், தி.மு.க. ஆட்சியில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்னும் திட்டத்தை அறிவித்ததோடு நில்லாமல், அடுத்தடுத்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் அவரது உதவியாளா்கள் என திட்டத்தை விரிவுபடுத்தியதோடு, அத்தகைய பேருந்து சேவையையும் படிப்படியாக அதிகரித்திருப்பது சாமானியா்களிடையே முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு மிகப்பெரிய மதிப்பை உருவாக்கித் தந்துள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடனே ஐந்து வருட காலமாக நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். அதே போல் தற்போது சிறப்பான முறையில் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

49 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் எண்ணை வெற்றி பெற செய்தீர்கள். அதே போல் இன்று நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அண்ணன் மதிவாணன் மற்றும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்றார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.