வையம்பட்டி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த கருங்குளம் T.B.காலனி பகுதியில் கடந்த சில தினங்களாகவே குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில் மற்ற பகுதியில் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குடிநீர் இன்றி கடும் அவதிக்கு ஆளான அப்பகுதி மக்கள் நேற்று இரவு வையம்பட்டி-பாலவிடுதி சாலையில் கருங்குளம் T.B காலனி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வையம்பட்டி போலீசார் காவல் ஆய்வாளர் வினோத்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் செக்கனம் ஊராட்சி செயலாளர் Tmt. செல்வி, துறை அலுவலர்கள் நிகழ்விடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் இருந்து கலைந்து சென்றனர்.