ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

0 370
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை ரயில் நிலையத்தில் திருச்சி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் முருகன் மனைவி மாணிக்கம்(வயது 80). இவர் காது கேட்டும் திறன் அற்றவர். இம்முதியவர் ரயில் பாதையை கடக்க முயன்றபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணப்பாறை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.