தி.மு.க. வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து நடிகர் போஸ் வாக்கு சேகரிப்பு…!
திருச்சி மாநகராட்சி 16வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மதிவாணன் வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து நடிகர் போஸ் 16வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். பின்னர் தி.மு.க.வின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.