திமுக வேட்பாளருக்கு எம்.எல்.ஏ. தீவிர வாக்கு சேகரிப்பு

0 362
Stalin trichy visit

மணப்பாறை நகராட்சி 25வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கீதா ஆ.மைக்கேல்ராஜை ஆதாரித்து சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல்சமது வீதி வீதியாக சென்று வாக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆட்சி பொறுப்பேற்ற உடனே பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும் மகளிர்கள் வெளியூர் செல்ல ஏதுவாக இலவச பயண திட்டம் அறிவிக்கப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்ஆகலாம் என்பன உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்து குறல் கொடுத்து வருகிறது. எனவே தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய பொதுமக்கள் உதயசூரிய சின்னத்தில் வாக்களித்து நமது வேட்பாளர் கீதா ஆ.மைக்கேல்ராஜை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.