பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்; ஆசிரியர் மீது போக்சோ பாய்ந்தது…
ஸ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ( ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப் பள்ளியில்) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் தேர்வு நடக்கும் போது ஆங்கில ஆசிரியர் முருகேசன் தவறாக (பாலியல் சீண்டல்) ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவி உடனடியாக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறியபோது, உறவினர்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சக ஆசிரியர்கள் ஆங்கில ஆசிரியர் முருகேசனை பூட்டி வைத்து பாதுகாத்தனர்.
இந்த சம்பவம் அறிந்த இனாம்குளத்தூர் காவல் நிலைய போலீசார் ஆய்வாளர் டி.விஜயகுமார் மற்றும் காவலர்கள் அங்கு வந்து மாணவி மற்றும் மாணவி தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது ஆசிரியர் தவறாக ஈடுபட்டார் என தெரியவந்தது. இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி முன் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் (ஜீயபுரம்) மற்றும் ஸ்ரீரங்கம் தாசில்தார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் முருகேசனை பொதுமக்களிடம் இருந்து மீட்டு ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு செயலில் ஆசிரியர் ஈடுபட்ட நிலையில் 10 மாணவர்களை கண்டித்து பள்ளி நிர்வாகம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.