மார்ச் 2ம் தேதி வரை கலெக்டர் கால அவகாசம்!

0 413
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2014 முதல் 2020ம் ஆண்டு வரை தொழிற்பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய தொழிற் சான்றிதழில் பயிற்சியாளர் பெயர், தந்தை, தாய் பெயர், புகைப்பட மாற்றம் ஆகியவற்றில் திருத்தம் இருந்தால், அதனை சரி செய்து கொள்ள வருகிற மார்ச் மாதம் 2ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு. வேறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது. எனவே, பயிற்சியாளர்கள் உரிய ஆவணங்களுடன் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.