ஸ்ரீரங்கத்தில் தியாகராஜர் ஆராதனை உற்சவம் தொடக்கம்

0 310
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதி கோரத மூலையில் 59ம் ஆண்டு தியாகப்ரும்ம ஆராதனை மகோத்சவம் 5 நாட்கள் நடக்கவுள்ளது. துவக்க நிகழ்ச்சியாக நேற்று காலை 8 மணியளவில் சீதாகல்யாண மகோத்வம் வடக்கு அடையவளஞ்சான் வீதி ஆதித்யா அபார்ட்மென்ட்டில் நடைபெற்றது. இன்று (21-ந்தேதி) காலை சத்குரு ஆராதனையும், மாலை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. முதல் நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணியளவில் ஷேக்மெஹபூப் சுபானி, காலிஷாபீ மற்றும் ஷேக் பெரோஸ் பாபு குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து ராமகிருஷ்ணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

 

வரும் 25-ந் தேதி வரை லக்ஷ்மிப்ரியா, சிக்கல் குருசரண் ஆகியோரின் இன்னிசை, விசாகாஹரியின் சங்கீத உபன்யாசம், எம்.எஸ். மணியின் பாட்டு, நாகை முரளிதரனின் வயலின் லக்ஷ்மி நராயணன் சீடர்களின் வயலின் இசை, அஸ்வத் நாராயணனின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

25-ந் தேதி இரவு 9.30 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.. இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் வடக்கு சித்திரை வீதி கோரத மூலையில் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கிச்சாமிஸ்ரீனிவாசன் தலைமையிலான ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.