நகை அடகு வைத்த ரூ.5.5 லட்சம் மாயம்!

0 390
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள K.புதுக்கோட்டையை சேர்ந்த மதியழகன் மனைவி சரண்யா(வயது 24). இவர் தனது தாய் வீரமணியுடன் நேற்று வையம்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 22.5 பவுன் நகையை ரூ.5 லட்சத்து 46 ஆயிரத்திற்கு அடமானம் வைத்துள்ளார். தொடர்ந்து வங்கியிலிருந்து பையில் பணத்துடன் திரும்பிய தாய், மகள் இருவரும் கடைவீதியில் பொருட்கள் வாங்கிவிட்டு சொந்த ஊர் செல்ல பஸ் ஸ்டாப்பிற்கு சென்றனர்.

அப்போது தான் வைத்திருந்த பணம் பையோடு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த சரண்யா பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து பதற்றமடைந்த சரண்யா, பணம் பறிபோனது குறித்து வையம்பட்டி போலீஸில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை கைபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.