திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினர் அனைத்து இடங்களிலும் வெற்றி!

0 629
Stalin trichy visit

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி பேரூராட்சி நகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகராட்சியிலுள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். முதல் வெற்றியாக 39-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ரெக்ஸ், 2வது வார்டு ஜவஹர், 41வது வார்டு கோவிந்தராஜன், 24வது வார்டு சோபியா விமலா ராணி, 31வது வார்டு சுஜாதா ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.