இண்டிகோவில் வந்த  ரூ.13 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

0 260
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது மதுரையைச் சேர்ந்த பொன்முடி (வயது 48) என்ற பயணி தனது கைப்பையில் மறைத்து ரூ.12.84 லட்சம் மதிப்பிலான 250 கிராம் தங்கத்தை சுருள் வடிவில் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.