திருச்சியில் 2 சிறுவர்கள் மீட்பு!

0 424
Stalin trichy visit

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பர்ணாசில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில் திருச்சி ரயில் நிலையம் வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சந்தேகப்படும் வகையில் 16 வயதுடைய ஒரு சிறுவனும், 15 வயதுடைய ஒரு சிறுவனும், ஒரு பெட்டியில் உட்கார்ந்து இருந்தனர்.

உடனே அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது, அவர்களில் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்காக ரயிலில் புறப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் காப்பகத்தில் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் 2 சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.