ஒரு ஓட்டு கூட போடலயா… புலம்பிய அ.ம.மு.க. வேட்பாளர்!

0 409
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சியில் அதிகமான வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது.

இதேபோல் கூத்தைப்பார் பேரூராட்சி சிறுகமணி பேரூராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். ஒரு சிலரைத்தவிர, பெரும்பான்மையான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அதிலும் குறிப்பாக முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் கூட ஒற்றைப்படை இலக்க எண்களிலேயே வாக்குகள் பெற்றிருந்தனர்.

இதில் சிறுகமணி பேரூராட்சியில் 1வது வார்டில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர் சிவகுமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் ஒருவர் கூட நமக்கு ஓட்டு போடவில்லையே என புலம்பியவாறு சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.