ஸ்ரீரங்கத்தில் புதியதாக தேர் செல்ல ரூ.98 லட்சத்தில் சாலை அமைக்க பூமிபூஜை
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலின் உபக் கோயிலான அன்பில் ஸ்ரீசுந்தராஜபெருமாள் கோயிலுக்கு சென்னை இந்திய கலாச்சார பண்பாட்டு நிறுவன த்தின் சார்பில் உபயமாக 500 மீட்டர் நீளத்தில், ரூ.98 லட்சம் மதிப்பில் புதியதாக தேர் செல்லும் சாலை அமைக்க இன்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
