மாணவியை தாயாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் சின்ன பள்ளி பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 38). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் விவசாய கூலி வேலைக்கு சென்ற இடத்தில் அங்கு வேலைக்கு வந்த மாணவியிடம் இருமுறை அத்துமீறி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கர்ப்பமான மாணவி கரூர் மாவட்டத் தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காவேரி உத்தரவின் பேரில்
சப் இன்ஸ்பெக்டர் பானுமதி மற்றும் போலீசார் மாணவியிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவி கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற போது பாண்டியன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இதுபற்றி தனக்கு எந்த விபரமும் தெரியாததால் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்ததாகவும்
கூறியுள்ளார். இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் போலீசார் பாண்டியனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.