திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் தனம் (வயது 30) என்பவர், சமூக வலைத்தளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, பகுதிநேர வேலைக்கு விண்ணப்பித்தார். அவரிடம் இருந்து சிறிது, சிறிதாக, ரூ.13 லட்சத்து 77 ஆயிரத்து 315 ரூபாய் ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனம் கொடுத்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.