திருச்சி மேலசிந்தாமணி சுப்ரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் செங்கோல் ரஜினி(வயது 37). இவர் அரியமங்கலம் அம்பிகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது டீக்கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த ரூ.200ஐ எடுத்து சென்றார். இதுகுறித்து ரஜினி அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து பணம் பறித்து சென்ற அரியமங்கலம் அற்புதசாமிபுரத்தை சேர்ந்த சாகுல்மீரான்(வயது 21) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.