முதல்வரின் பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு!

0 566
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-
50 ஆண்டுகால பொது வாழ்வின் உழைப்பால் உயர்ந்து இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்று மனுநீதி சோழனை போல் சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை தன்வயப்படுத்தி,

தமிழகத்தின் எழுச்சி ஓயாது உழைக்கும் ஒப்பற்ற கழகத் தலைவர்- தமிழக முதல்வரின் 69வது பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி அன்று மற்றும் மார்ச் மாதம் முழுவதும் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வட்ட, வார்டு, கிளை, பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் ஆகிய பகுதிகளில் கழகத் தலைவர் அவர்களின் பிறந்த நாளன்று கழகக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரத்ததான முகாம் மருத்துவ முகாம்கள் நடத்தி, மரக்கன்றுகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

இதற்கான ஏற்பாடுகளை மாநில-மாவட்ட, தலைமை செயற்குழு உறுப்பினர்கள்- பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் சிறப்பாக செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.