கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவின்பேரில், சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி வெளியூரிலிருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் கல்யாணி சம்பந்தப்பட்ட தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி, கோவிலில் வேலை பார்த்த காவலாளிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post