பணம் செலுத்தியதில் பெட்ரோல் பங்கில் தகராறு; 3 பா.ஜ.க. நிர்வாகிகள் கைது!

0 347
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 45). பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவர் ஐஏஎஸ் நகர் அருகில் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு பணத்தை பேடிஎம்மில் செலுத்தினார். இதில் பணம் வந்ததற்கான தகவல் வராததால் பங்க் மேலாளர் சிவனேசன் மற்றும் ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டது. விஜயகுமார் தகவலின்பேரில்

அங்கு வந்த திருவெறும்பூர் பாஜக வடக்கு மண்டல தலைவர் சக்திவேல், மாவட்ட ஊர்க பிரிவு துணைத் தலைவர் சிவா ஆகியோரும் சேர்ந்ததால் வாக்குவாதம் முற்றியது. இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பினர் புகாரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிந்து பாஜக நிர்வாகிகள் சக்திவேல், விஜயகுமார், சிவா மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர் தேசிங்கு(வயது 36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.