சுத்தியலில் மறைத்து தங்கம் கடத்தி வந்தவர் கைது
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடத்தினர். அப்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொண்டு வந்த சுத்தியலை சோதனையிட்ட போது, சுத்தியல் கைபிடியில் மறைத்து கடத்தி வந்த 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.9.80 லட்சமாகும். மேலும் அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.