தமிழகத்தில் திருச்சி உள்பட 37 பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்களை டிரான்ஸ்பர் செய்து அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனராக பணியாற்றிய டாக்டர் எஸ்.ராம்கணேஷ் சிவகங்கைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஏ.சுப்பிரமணி திருச்சிக்கு இடமாற்றப்பட்டார். இவர், ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருச்சியில் இருந்து சேலம் இடமாறுதலாகி சென்றது குறிப்பிடத்தக்கது. இதுபோல புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.