டெக்னீசியன் காலியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு
திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பணிகளில் டெக்னீசியன் காலியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் ரேடியோகிராபி-8, லேப் டெக்னீசியன்-10, டயாலிசஸ் டெக்னீசியன்-8, சி.டி.ஸ்கேன்-10 என மொத்தம் 36 பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவக்கல்லுரி துணைமுதல்வர் அர்ஷியாபேகம் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் தேர்வுக்கு வந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து நேர்காணல் செய்தனர். இதில் திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து டிப்ளமோ மற்றும் லேப் டெக்னீசியன் முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் இன்றும் (சனிக்கிழமை) இ.சி.ஜி. டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது.