திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இப்போது திருச்சி மரக்கடை பகுதியில் மாநகராட்சி தண்ணீர் தொட்டி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. வரும் 25ம் தேதி (நாளை மறுநாள்) முதல் மண்டல் பாஸ்போர்ட் அலுவலகம் திருச்சி தில்லைநகர் 7வது குறுக்கு தெருவில் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன், தபால் அலுவலகம் ஆகியவை செயல்பட்ட இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட உள்ளது. இடமாற்றம் காரணமாக புதிய அலுவலகத்தில் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொதுவிசாரணை கவுண்டர் செயல்படாது. எனினும்,
விண்ணப்பதாரர்கள் இந்த நாட்களில் 7598507203 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும், rpo.trichy@mea.gov.in என்ற இணையதளத்திலும் பொது விசாரணைகள் மேற்கொள்ளலாம். 29ம் தேதி முதல் புதிய அலுவலகத்தில் பொதுவிசாரணை கவுன்ட்டர்கள் செயல்பட தொடங்கும். திருச்சி மண்டல பாஸ்போர்ட்அலுவலக கட்டுபாட்டில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள். தபால் அலுவலக பாஸ்போர்ட் மையங்கள் வழக்கம்போல் செயல்படும். பொதுவிசாரணை, விண்ணப்பத்தின் நிலை அறிய, போலீஸ் விசாரணை அறிக்கை உள்ளிட்டவைகளுக்கு 1800-258-1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை தொடர்புகொள்ளலாம். இத்தகவலை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.