அண்ணன் உதட்டை கடித்து துப்பிய பாசக்கார தம்பி கைது!

0 332
Stalin trichy visit

திருச்சி தா.பேட்டை அருகே உள்ள தும்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் மனோகரன்(வயது 46). இவரது தம்பி மூர்த்தி(வயது 44). இருவரும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதில் தகராறு இருந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே

 

ஏற்பட்ட தகராறில் தம்பி மூர்த்தி, அண்ணான் மனோகரன் உதட்டை கடித்துத் துப்பினார். மேலும் அண்ணனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மனோகரன் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் வழக்குப்பதிந்து மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.