திருச்சி மாவட்டம், புலிவலம் அருகே உள்ள மூவானூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்குசித்தாம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் கிணற்று தண்ணீரில் மூழ்கினார். இதனை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மீட்புக் குழுவினர் கிணற்றில் மூழ்கிய விஜயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரை சடலமாக மீட்ட

தீயணைப்புத்துறையினர் சடலத்தை கிணற்றிற்கு மேலே கொண்டுவந்து கிடத்தினர். இந்த சம்பவ குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வாத்தலை போலீசாருக்கு முன்னதாகவே தகவலை தெரிவித்தும் அவர்கள் விசாரணை செய்வதற்காக சுமார் 2 மணிநேரம் காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாலை நேரத்தில் கிணற்றில் மூழ்கி பலியான இளைஞர் சடலம் இரவு வரை கிணறு அருகே கேட்பாரற்று கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் விஜயகுமார் உடலை கைப்பற்றிய வாத்தலை போலீசார் உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்துகொள்ளவும்…https://chat.whatsapp.com/IFC5JrQzHnf9WurwIfJTIH