திருச்சி பாலக்கரை தர்மநாதபுரம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் பன்னீர்செல்வம். கூலித் தொழிலாளி. இவரது மகள் ஜாஸ்மின்ஷீபா(வயது 34). இவர் எம்.காம், எம்பில் படித்துள்ளார். இவருக்கும், திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதி-1ஐச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் மாஜி மிலிட்டரி வீரரான ஸ்டீபன்(40) என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அன்று திருமணம் நடந்தது. இதனைத்
தொடர்ந்து ஹரியானா மாநிலம் அம்பாலா என்ற ஊரில் மிலிட்டரி குடியிருப்பில் வசித்தவர்கள். 2020 ல் ஓய்வு பெற்ற பின் நவல்பட்டு அண்ணாநகரில் சொந்த வீட்டில் வசித்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டீபன் தற்போது துப்பாக்கித் தொழிற்சாலை தனியார் செக்யூரிட்டியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரியில் கணவர் ஸ்டீபனும், மாமியார் ஜாக்குலின் ஸ்டெல்லாராணியும் சேர்ந்து தனக்கு குழந்தை இல்லாத காரணத்தைக் காட்டி, உணவு வழங்காமல் வீட்டில் தன்னை அடைத்து வைத்தும், தகாத வார்த்தைகளால் பேசியும், வரதட்சணை கேட்டு என்னை கொடுமை படுத்துகின்றனர். மேலும் ஸ்டீபன் ஏற்கனவே திருமணம் செய்து விவகாரத்து பெற்ற மனைவியுடன் வாழ சென்று விடுவதாகவும், என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருவதாக

ஜாஸ்மின்ஷீபா கூறினார். இதன்பிறகு ஜாஸ்மின்ஷீபா வீட்டிலிருந்து தப்பிப் பிழைத்து வந்து தந்தை வீட்டில் இருப்பதாகவும், உயிர் பயத்துடன் உள்ள தன்னைக் கொடுமைபடுத்திய கணவன் மற்றும் மாமியர் மீது உரிய நடவடிக்கைக் கோரி திருச்சி மாநகர கமிஷனரிடம் கடந்த ஜனவரி 19ம் தேதி புகார் செய்யதாக கூறினார். அவர் மாவட்ட எஸ்பி.க்கு மனுவை அனுப்பி வைத்ததால், அங்கிருந்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் நடவடிக்கைக் கோரி புகார் மனு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. தகவலறிந்த ஜாஸ்மின்ஷீபா திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நடையாய் நடந்தும் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி எந்தவொரு நடவடிக்கையுமே மேற்கொள்ளவில்லை
என்று கூறப்படுகிறது. இதனால் பொருமை இழந்த ஜாஸ்மின்ஷீபா தனது பெரிய அம்மா சகாய ஆரோக்கிய ராணி, தம்பி ஆல்பர்ட் மார்சல் ஆகியோருடன் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய நுலைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதோடு தனது புகரின் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி காவல்நிலையத்தில் இருந்து வெளியில் செல்லவிடாமல் மறித்து தனக்கு நீதிவேண்டு என ஜாஸ்மின்ஷீபா கதறி அழுததை பார்ப்பவர்கள் நெஞ்சையும் கரைய வைத்தது. இதனால் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, திருவெறும்பூர் தனிப்பிரிவு எஸ்ஐ மனோகரன் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாககூறி அவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் போட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.