திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீழவாளாடி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகள் யாழினி. இவர் கூத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி சென்ற மாணவி அதன் பிறகு வீட்டுக்கு வரைவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் எங்கு தேடியும்
கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் இதுகுறித்து லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் தேடி வருகின்றனர். காணாமல் போன யாழினி வாளாடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், உத்தமர் காந்தி விருது பெற்றவருமான செ. ஜெயசந்திரன் தம்பி மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.