திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையடுத்த துவாக்குடி தெற்கு மழை, பழைய கருப்புகோயில் தெரு, எம்டி சாலையை சேர்ந்தவர் ஐயாக்குட்டி. இவரது மகன் ஐய்யப்பன் (வயது 31). மேலும் இவர் அப்பகுதியில் தனியார் கம்பெனியில் வெல்டராகபணிபுரிந்து வருகிறார். மேலும் இவரது மனைவி தனலட்சுமி(20). இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் இதனை அடுத்து தனலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டுள்ளார். மேலும் இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்நிலையில் துவாக்குடி போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இந்த காரணத்தினால் தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்தது. மேலும் இதனையடுத்து வழக்கு பதிவு செய்து திருச்சி கோட்டாடசியர் தவச்செல்வம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.