திருச்சி, கே.கே.நகர் ஐயப்பன் நகர், நேரு தெருவை சேர்ந்தவர் துரைராஜ்(வயது 50). திருச்சி பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவர் கடந்த 5ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது கண்டு
அதிர்ச்சியடைந்தார். இதேபோல் திருச்சி, கே.கே.நகர், அழகிரி தெருவை சேர்ந்தவர் பிரபாவதி. இவர் திருச்சி அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். காலை பள்ளிக்கு சென்று பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 1 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து இருவரும் அருகில் உள்ள கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.