திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கெள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது

நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 24 வழக்குகள் பதிவு செய்யயப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளிகளான காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த தமிழ்செல்வி, பாலக்கரை பகுதியில் நவலடியான், எ.புதூர் பகுதியில் குமார் (என்கிற) வெள்ளெலிக்குமார் மற்றும் கே.கே.நகர் பகுதியில் சக்திவேல் ஆகிய 4 எதிரிகளை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டு,
அவர்களிடமிருந்து 1550 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்களை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நபர்கள் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த அரவிந்த், ஷெப்ரின் வில்சன் மற்றும் அசன்அலி ஆகிய 3 பேர் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 296 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 296 பேர் கைது
செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்த 369 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரத்தில், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.