உறையூரிலுள்ள டாஸ்மார்க்கை கடை 3 மாதத்திற்குள் இடம் மாற்றப்படும் – அமைதி பேச்சுவார்த்தையில் உறுதி
திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், தாமலவரூபாயம் கிராமம், உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உறையூர் கடைவீதி மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, இந்து முன்னணி சார்பில் முற்றுகை போரட்டம் நடத்த உள்ளதாக வரப்பெற்ற தகவல் அடிப்படையில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் பொருட்டு, இன்று (23.05.2022) முற்பகல் 12.00 மணியளவில் திருச்சிராப்பள்ளி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் கலந்துக்கொண்டனர். திருவாளர்கள்:1. மணிகண்டன், மாவட்ட பேச்சாளர், இந்து முன்னணி, திருச்சிராப்பள்ளி 2. கணேஷ்குமார், இந்து முன்னணி, திருச்சிராப்பள்ளி 3. வருவாய் வட்டாட்சியர், திருச்சிராப்பள்ளி மேற்கு 4. உதவி மேலாளர், சில்லரை விற்பனை, டாஸ்மாக், துவாக்குடி 5. மண்டல துணைவட்டாட்சியர், திருச்சிராப்பள்ளி மேற்கு 6. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், உறையூர் காவல் நிலையம் 7. வருவாய் ஆய்வாளர், வடக்கு பகுதி 8. கிராம நிர்வாக அலுவலர்,தாமலவரூபாயம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், தாமலவரூபாயம் கிராமம், உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உறையூர் கடைவீதி மெயின் ரோட்டில் கடைவீதிபகுதியில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடை எண்கள்: 10203, 10405, 10519 ஆகிய மூன்று டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் அருகருகே அமைந்துள்ளதால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், மேற்படி மூன்று கடைகளில் நடுவே அமைந்துள்ள கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று, மூன்று மாத காலத்திற்குள் நடு கடையை (எண்:10519) மட்டும் இடத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக டாஸ்மாக், சில்லரை விற்பனை, உதவி மேலாளர் தெரிவித்தார்.
மேலும், மேற்படி கடைகள் அருகே போக்குவரத்து இடையூறு அதிகமாக இருப்பதால் உரிய காவல்துறை மூலம் அதனை சீர்செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர். இது குறித்து உடன் அமல்படுத்தப்படும் என காவல் உதவி ஆய்வாளர் தெரிவித்தார்.