கூத்தூர் மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் ஒருவர் பலி
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள குடி தெருவைச் சேர்ந்தவர் சையது ஜலால் இவரது மகன் 32 வயதான காதர்மொய்தீன்.சம்சா வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கூத்தூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தத கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.